விழாவிற்கு பொருளாளர் அப்பாவு வரவேற்புரை ஆற்றினார். அம்மன் கிரானைட்ஸ் உரிமையாளர் முத்து ராமசாமி முன்னிலை வகித்தார். திரிவேணி குழுமம் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சக்தி குழுமம் மாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், அன்பழகன், பர்கூர் எம்எல்ஏ மதியழகன், அறக்கட்டளை செயலாளர் அரவிந்தன், பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இதில் 140 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ. 14 லட்சமும், 10 அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. அம்மன் கிரானைட்ஸ் உரிமையாளர் அஸ்வின்முத்துக்கு தொழில்துறை விருதும், ஊத்தங்கரை வித்யாமந்திர் கல்வி நிறுவனர் சந்திரசேகரனுக்கு தீரன் சின்னமலை விருதும், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணிக்கு சமூக சேவை விருதும், எழுத்தாளர் தேவிபாரதிக்கு இலக்கிய துறை விருதும், அசோகனுக்கு கொங்குவேள் விருதும், இஆர்கே கல்வி நிறுவனர் செல்வராஜ், அமுதம் புரூட் உதயகுமார், வழக்கறிஞர் பிரகாசம் ஆகியோருக்கு காலிங்கராயன் விருதும், செந்தில் பப்ளிக் பள்ளி செயலாளர் தனசேகர் டாக்டர் சுப்பராயன் விருது, நாளந்தா கல்வி நிறுவன தாளாளர் சாமுண்டீஸ்வரிக்கு கே.பி.சுந்ராம்பாள் விருதும், பாண்டுரங்கன், சந்திசேகரன் ஆகியோருக்கு பாரத ரத்னா சி.சுப்ரமணியம் விருதும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக