பாப்பாரப்பட்டி அருகே, சி.ஆர்.பி.எப்., ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதையுடன், 27 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜனவரி, 2025

பாப்பாரப்பட்டி அருகே, சி.ஆர்.பி.எப்., ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதையுடன், 27 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.


தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள, மாமரத்துபள்ளம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி, 40, இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகள் உள்ளனர். இவர் கடந்த, 2004 ல் சி.ஆர்.பி.எப்., பணியில் சேர்ந்து, 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவர் சில ஆண்டுகளாக அசாம் மாநிலம், மணிப்பூரில் பணியில் இருந்தார். 


இந்நிலையில், கோவிந்தசாமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த, கடந்த மாதம் இறுதியில் உயிரிழந்தார். அவரது உடல் விமான மூலம், கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம், சொந்த ஊரான மாமரத்துபள்ளத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கபட்டது. அதனை தொடர்ந்து நேற்று, 27 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad