தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்க மற்றும் வாலிபால் போட்டிகளில் பங்கேற்கவுள்ள தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணாக்கர்கள் சத்யன் மற்றும் ஜீவ செல்வி தேர்வு கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் வாழ்த்து
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ள மாணவன் சத்யனுக்கும், வாலிபால் போட்டியில் பங்கேற்கும் மாணவி ஜீவசெல்வி க்கும், பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தேர்வு கடிதத்தினை கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் அவர்கள் வழங்கி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு.பாலமுருகன், பேராசிரியர்கள், விளையாட்டு குழு பேராசிரிய உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.
போட்டிகளில் பங்கேற்கவுள்ள தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணாக்கர்கள் சத்யன் மற்றும் ஜீவ செல்வி தேர்வு கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் வாழ்த்து.
சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் சதுரங்கப் போட்டிகள் அண்மையில் பல்கலைக்கழகம் சார்பாக நடைபெற்றது, அதில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவன் J.M சத்யன் பங்கேற்று ஆறாம் இடம் பெற்று சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்க போட்டிகள் வருகின்ற 08-01-2025 முதல் 11-01-2025 வரை சென்னை ஆவடியில் உள்ள வேல் டெக் DEEMED பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கின்ற போட்டிகளில் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளார்.
இதே போல தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் வாலிபால் போட்டிகளில் பங்கேற்க தருமபுரி அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி M.ஜீவசெல்வி , சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டு, 07-01-2025 முதல் 11-01-2025 வரை, சென்னை ஜேப்பியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் வாலிபால் போட்டியில் பங்கேற்கிறார்.
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ள மாணவன் சத்யனுக்கும், வாலிபால் போட்டியில் பங்கேற்கும் மாணவி ஜீவசெல்வி க்கும், பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தேர்வு கடிதத்தினை கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் அவர்கள் வழங்கி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு.பாலமுருகன், பேராசிரியர்கள், விளையாட்டு குழு பேராசிரிய உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக