முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், மற்றும் நான்கு கால வேள்வி பூஜையுடன், ஸ்ரீ முனியப்பன் சுவாமிக்கு ரக்ஷாபந்தன, நாடிசந்தனம், செய்யப்பட்டு பூர்ணாஹதி நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலச தீர்த்தம் எடுத்து சென்று கோயில் உச்சியில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ முனியப்ப சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் ஆ.மணி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் எம்.பி. அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை அளித்தனர்.
இவ்விழாவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், எம் .வீ.டி.கோபால், இல.கிருஷ்ணன், முனியப்பன், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் செழியன், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரகாஷ், முத்துமணிஆனந்தன், தேவேந்திரன், கவுன்சிலர் கார்த்திகேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக