பாலக்கோடு ஸ்ரீ ராம் சில்க்ஸ்ல் பொங்கல் விற்பனையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 3 பரிசுகளை வென்றவர்களுக்கு பம்பர் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

பாலக்கோடு ஸ்ரீ ராம் சில்க்ஸ்ல் பொங்கல் விற்பனையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 3 பரிசுகளை வென்றவர்களுக்கு பம்பர் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு,  எம்.ஜி.சாலையில் இயங்கி வரும் ஸ்ரீராம் சில்க்ஸ் ஜவுளி நிறுவனம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 3 பம்பர் பரிசுகள் மற்றும் சிறப்பு பரிசுகளை அறிவித்திருந்தது.


அதனையொட்டி ஆயிரக்கனக்கான வாடிக்கையாளர்கள் பரிசு கூப்பன்களை பூர்த்தி செய்து அதிர்ஷ்ட பெட்டியில் போட்டிருந்தனர். நேற்று  வாடிக்கையாளர்களில் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி தொழிலதிபர் கே.ஜி.மாதையன் தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு மருத்துவர் பாலகிருஷ்ணன், மருத்துவர் மோகன பிரியா ஸ்ரீராம் சில்க் மேலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வண்ணாத்திபட்டியை சேர்ந்த கோவிந்தசாமிக்கு பம்பர் பரிசாக  இருசக்கர வாகனமும், இருதுகோட்டையை சேர்ந்த மகேஸ்வரிக்கு இரண்டு கிராம் தங்க நாணயமும், பொடுத்தம்பட்டியை  அள்ளியை சேர்ந்த கந்தசாமி அவர்களுக்கு 40 இன்ச் எல்.இ.டி டிவியும் அதிர்ஷ்ட பரிசாக பெற்றனர்.

மேலும் 50 வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள், ஜவுளி நிறுவன ஊழியர்கள் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad