தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜோதிஅள்ளி கரம்பு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்னுசாமி (வயது. 48) இவரது மனைவி தேவி இவர்களது மகனுக்கும் அப்பகுதியில் உள்ள சில வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை தட்டி கேட்ட பொன்னுசாமியை வாலிபர்கள் சராமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தவரை குடும்பத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் குடும்பத்தினருடன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார்.
பாலக்கோடு கல்கூடப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது சிலம்பு , பெரியசாமி, சின்னசாமி, வேடியப்பன், சூர்யா, மாதையன், சின்னபையன் மற்றும் 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் இவர்களை வழிமறித்து பொன்னுசாமியின் 12ம் வகுப்பு படிக்கும் மாணவியை தாக்கி உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்தியதுடன் மாணவியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். உடனடியாக மாணவியை பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மாணவியின் தாய் தேவி கூறுகையில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தனது மகளை தாக்கி தங்க செயின் பறித்து சென்றுள்ளதாகாவும், அனைவரும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததாகவும், இவர்களால் எங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பறித்து சென்ற நகையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக