ஃபெஞ்சல்‌ புயல்‌ காரணமாக பெய்த கனமழையால்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ பாதிப்புக்குள்ளான பகுதிகளில்‌ பயிர்‌ சேதங்கள்‌ உள்ளிட்ட கணக்கெடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்‌. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

ஃபெஞ்சல்‌ புயல்‌ காரணமாக பெய்த கனமழையால்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ பாதிப்புக்குள்ளான பகுதிகளில்‌ பயிர்‌ சேதங்கள்‌ உள்ளிட்ட கணக்கெடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்‌.


தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்டரங்கில்‌ தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனத்தின்‌ மேலாண்மை இயக்குநர்‌ / தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்‌ திருமதி.ச.திவ்யதர்ஷினி, அவர்கள்‌. தலைமையில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள்‌ முன்னிலையில்‌ ஃபெஞ்சல்‌ புயல்‌ காரணமாக பெய்த கனமழையால்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ பாதிப்புக்குள்ளான பகுதிகளில்‌ பயிர்‌ சேதங்கள்‌ உள்ளிட்ட கணக்கெடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்‌ மற்றும்‌ மாவட்டத்தில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ வளர்ச்சி திட்டப்பணிகள்‌ குறித்து அலுவலர்களூடனான ஆய்வு கூட்டம்‌ இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்டரங்கில்‌ தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனத்தின்‌ மேலாண்மை இயக்குநர்‌ / தருமபுரி மாவட்ட கண்காணிப்பு   அலுவலர்‌ திருமதி.ச.திவ்யதர்ஷினி, அவர்கள்‌ தலைமையில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள்‌ முன்னிலையில்‌ ஃபெஞ்சல்‌ புயல்‌ காரணமாக பெய்த கனமழையால்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ பாதிப்புக்குள்ளான பகுதிகளில்‌ பயிர்‌ சேதங்கள்‌ உள்ளிட்ட கணக்கெடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்‌ மற்றும்‌ மாவட்டத்தில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ வளர்ச்சி திட்டப்பணிகள்‌ குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்‌ இன்று (11.01.2025) நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்தில்‌ கடந்த டிசம்பர்‌ மாதத்தில்‌ அடித்த ஃபெங்கால்‌ புயலின்‌ காரணமாக 2,736 எக்டர்‌ பரப்பில்‌ நெல்‌, சிறுதானியங்கள்‌, பயறு வகைகள்‌, பருத்தி மற்றும்‌ கரும்பு ஆகிய வேளாண்‌ பயிர்களும்‌, 4,822 எக்டர்‌ பரப்பில்‌ தக்காளி, மரவள்ளி, வாழை, மஞ்சள்‌, மற்றும்‌ இதர தோட்டக்கலை பயிர்களும்‌ சேதமடைந்துள்ளது என வேளாண்துறை, தோட்டக்கலைத்‌ துறை மற்றும்‌ வருவாய்த்துறை ஆகிய துறை அலுவலர்களால்‌ கணக்கீடு செய்யப்பட்டு இழப்பீடு தொகை கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.


அதனைத்‌ தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமங்களான பத்தல அள்ளி, கொங்கரப்பட்டி, அதிகாரப்பட்டி, பொம்மிடி, மருதிபட்டி மற்றும்‌ எம்‌.குட்டப்பட்டி ஆகிய கிராமங்களில்‌ இழப்பிடு கோரிய விவசாயிகளின்‌ விண்ணப்பங்களையும்‌, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும்‌ வருவாய்த்துறை அலுவலர்களின்‌ புள்ளிவிவர ஆவணங்களையும்‌ அறிக்கையுடன்‌ ஒப்பீடு செய்து     இன்றைய தினம்‌ அனைத்து துறை அலுவலர்களுடன்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும்‌, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர்‌ வழங்குதல்‌ குறித்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளை சார்ந்த அலுவலர்களுடன்‌ குடிநீர்‌ பற்றாக்குறை குறித்து கேட்டு அறிந்து அதற்கான ஏற்பாடு பணிகள்‌ என்னென்ன மேற்கொள்ளப்படுகிறது என்பதனை கேட்டு அறிந்து, இதில்‌ குடிநீர்‌ பற்றாக்குறை போக்குவதற்கு ஏதுவாக பொது நிதி மற்றும்‌ ஊராட்சி நிதியும்‌ பயன்படுத்தி உடனுக்குடன்‌ தீர்வு காணப்பட வேண்டும்‌. மேலும்‌, சில பகுதிகளில்‌ நிலத்தடி குடிநீர்‌ ஆதாரம்‌ இல்லாத பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடு வாயிலாக குடிநீர்‌ விநியோகம்‌ தடையின்றி செயல்படுத்தப்பட்டு வரும்‌ செயல்பாட்டு பணிகள்‌ குறித்தும்‌, பல்வேறு துறைகளில்‌ வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும்‌ பணிகளை துரிதப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்‌ என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


பின்னர்‌, தருமபுரி மாவட்டத்தில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்‌ குறித்து ஒவ்வொரு துறை வாரியாக தனித்தனியாக. ஆய்வு மேற்கொண்டு, துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, அபெஞ்சல்‌ புயல்‌ காரணமாக பெய்த கனமழையால்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ பாதிப்புக்குள்ளான பகுதிகளில்‌ பயிர்‌ சேதங்கள்‌ உள்ளிட்ட கணக்கெடுப்பு குறித்து அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்கள்‌.


இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம்‌, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்‌, அதியமான்கோட்டையில்‌ மாநில நிதி குழுத்திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.22.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டுவரும்‌ சாலை பணிகளையும்‌, அதியமான்கோட்டை ஊராட்சியில்‌ கலைஞரின்‌ கனவு இல்லம்‌ திட்டத்தின்‌ கீழ்‌, ரூ.47.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 5 விடுகள்‌ கட்டப்பட்டுவரும்‌ கட்டுமான பணிகளையும்‌ தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்‌ திருமதி.ச.திவ்யதர்ஷினி, இ.ஆ.ப. அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்‌ என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.


இந்த நிகழ்வுகளின்போது, கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி) திரு.கெளரவ்குமார்‌,இ.ஆஃபப., மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி. ஆர்‌.கவிதா, வருவாய்‌ கோட்டாட்சியர்கள்‌ திருமதி.இரா.காயத்ரி (தருமபுரி) திரு.சின்னசாமி, (அரூர்‌) வேளாண்மை இணை இயக்குநர்‌ திரு.மரிய ரவி ஜெயக்குமார்‌, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்‌ திரு.பாலகிருஷ்ணன்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (வளர்ச்சி) திரு.து.வேடியப்பன்‌, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌ திரு.சையது முகைதீன்‌ இப்ராகிம்‌. உள்ளிட்ட அரசு துறை உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad