தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் இயங்கி வரும் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024-25 ம் ஆண்டு அரவைப் பருவத்திற்க்கான கரும்பு அரவை பணியை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை வகித்து துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் செயலாட்சியர் ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கொ.மாதப்பன், தடங்கம் சுப்ரமணி, வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது,
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, விவசாய சங்க மாநில தலைவர் சின்னசாமி, விவசாயிகள் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.வி.குமார், காரிமங்கலம் அக்ரோ தலைவர் . மாரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் வசந்தன், சர்க்கரை ஆலை இயக்குநர்கள் VM.சேகர், வீரமணி மற்றும் ஆலை தொழிலாளர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக