பெண்களின் போராட்டத்தின் எதிரொலி; இடமாற்றம் பெறும் டாஸ்மாக். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 ஜனவரி, 2025

பெண்களின் போராட்டத்தின் எதிரொலி; இடமாற்றம் பெறும் டாஸ்மாக்.


தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில், சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன, சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொம்மிடி - அரூர் ரோட்டில் அமைந்துள்ள வடசந்தையூர் பகுதியில் ஒரு டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. அந்த கடையால் வடசந்தையூர், தென்சந்தையூர், துறிஞ்சிப்பட்டி, ஜெயந்தி காலணி, இந்திராகாலணி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்த கடையில் மது வாங்கும் மதுபிரியர்கள், அப்பகுதியில் சாலையோரம் அமர்ந்து மது அருந்துகின்றனர். காலி பாட்டில்களை போதையில் உடைத்து உடைப்பதாலும், மேலும் அவ்வழியே பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதி பெண்கள், இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து ஊராட்சி கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இதையடுத்து இந்த ஊராட்சி பகுதிகளில் மது அருந்தவும், சாலையோரம் சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வடசந்தையூரில் இயங்கி வரும் கடையை, சந்தைப்பேட்டை பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து ஊராட்சிக்கு சொந்தமான வேறு இடத்தில் புதியதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டுள்ளது. விரைவில், இந்த டாஸ்மாக் கடை மாற்றப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad