தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் TNGOTS சங்கத்தின் சார்பாக நடைபெற்ற தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு முழக்கம்! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் TNGOTS சங்கத்தின் சார்பாக நடைபெற்ற தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு முழக்கம்!


TNGOTS அமைப்பின் சார்பாக இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை, கடந்த செப்டம்பர் மாதம் TNGOTS அமைப்பின் சார்பில்  மாநில தலைவர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை அடிப்படையில் மூன்று நிலை பணியாளருக்கான கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி தரவும், பொங்கல் போனசை உயர்த்தி தரவும், தூய்மை காவலர்களுக்கு முதல் முறையாக இந்த ஆண்டு முதல் போனஸ் வழங்க கோரியும், மாநில தலைவர் தருமபுரி க.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது.


கிராம ஊராட்சி OHT ஆப்ரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், தமிழக அரசின் அலட்சியத்தால் விரக்தியின் உச்சத்தில் இருப்பதை மெய்பிக்கும் விதமாக இன்று தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு முழக்கம் நடைபெற்றது. நிகழ்வில் தங்கள் வலிகளை, வேதனைகளை சொல்லியும், ஒருவரை ஒருவர் கட்டி தழுவி கண்ணீர் விட்ட காட்சி தருமபுரி மண்ணில் இன்று நடந்தது.


இதன் நோக்கம் எதிர்வரும் பிப்ரவரி 12.ம்தேதி சென்னை மெரினாவில் முன்னால் முதல்வர்கள் பேரரஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமாதியில் சுமார் ஒன்றரை லட்சம் பணியாளர்கள் கலந்து கொள்ள மனுவைத்து ஒப்பாரி வைத்து தஞ்சமடையும் நிகழ்வுக்கு முன்னுதாரமாக மாறியது.

அடுத்த வாரம் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களையும் சந்தித்து மெரினா நிகழ்வுக்கு அழைக்கின்ற வகையில், முன்னால் முதல்வரும், மாண்பு மிகு எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொது செயலாளர்எடப்பாடி கே.பழனிச்சாமி ,விசிக தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மற்றும்  அனைத்து அரசியல் தலைவர்களை சந்தித்து நிகழ்வுக்கு அழைப்பது எனவும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யபட்டது.


இன்றறைய நிகழ்வில் கண்ணீர் விட்டு கதறி அழுத OHT ஆப்ரேட்டர்கள், தூய்மை காவலர்ள், தூய்மை பணியாளர்கள் நிலையை கண்டு ஒட்டுமொத்த பொதுமக்களும் சம்பவ இடத்தில் ஆறுதல் கூறி தேற்றியது உண்மையாகவே காண்போரை நெகிழ செய்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், கூட்டத்திற்கு  மாநில தலைவர் தருமபுரி க.கிருஷ்ணன் தலைமை தாங்கினார், மாநில பொது செயலாளர் கடலூர் திரு R.விஜயபாலன், மாநில மகளிர் அணி செயலாளர் சேலம் திருமதி கே.மகேஷ்வரி, மாநில இணை செயலாளர் காஞ்சி, திரு.V. சங்கர்,  மாநில செயற்குழு உறுப்பினர் திருப்பத்தூர் M.சக்கரவர்த்தி, காஞ்சி S.வேளாங்கன்னி,மாநில செயற்குழு உறுப்பினர்  உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad