ராமகொண்டஅள்ளி அரசு பள்ளிகள் தமிழ் கூடல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 ஜனவரி, 2025

ராமகொண்டஅள்ளி அரசு பள்ளிகள் தமிழ் கூடல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு.


தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் ராமகொண்டள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல்  நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.


மாணவ மாணவிகளிடையே தமிழ் மொழியின் ஆர்வத்தையும் ,தமிழ் வளர்த்த சான்றோர்களைப் பற்றியும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு பள்ளியிலும் இந்த தமிழ் கூடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 


ராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மூத்த தமிழ் ஆசிரியர் சுப்பிரமணி மாணவர்களுக்கு தமிழின் தொன்மையை பற்றியும் தமிழ் வளர்த்த சான்றோர்கள் பற்றியும் விளக்கி கூறி சிறப்புரை ஆற்றினார். மேலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்.


இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மார கவுண்டர், பிரபாகரன், கர்ணன், சுரேஷ், கோவிந்தராஜ்உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கில ஆசிரியை இளமதி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad