தமிழக வெற்றிக் கழகத்தின் தர்மபுரி மாவட்டம் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த தாபா எம் சிவா அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். குறிப்பாக தொப்பூர் டோல்கேட் பகுதியில் கட்சி நிர்வாகிகள் மலர்கள் தூவி, பட்டாசுகள் வெடித்து பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரிய அரசியல் கட்சித் தலைவருக்கு கொடுக்கும் வரவேற்பு போல் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அவருடன் புகைப்படம் எடுப்பதற்கும், வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கும் ஒருவரையொருவர் முந்தி செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே கட்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தில் சரியான பதவிகள் வழங்கப்படும் தர்மபுரி மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன என்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் தாபா எம் சிவா பேசினார்.
அதைத்தொடர்ந்து தருமபுரி நகரப் பகுதியில் உள்ள இலக்கியம்பட்டி ஸ்ரீ சாலை மாரியம்மன் கோவிலில் தாபா சிவா பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். உடன் மாவட்டக் கழக இணைச் செயலாளர் வீரமணி, பொருளாளர் கோபி, துணைச் செயலாளர் முருகன், விஜயராணி, இலக்கியம்பட்டி செந்தில், இலக்கியம்பட்டி வெங்கடேஷ், கணேஷ், பிரவீன், பெரியண்ணன், மேல் கொட்டாய் மேடு கணபதி, கோவிந்தன், கண்ணன், தென்றல், மற்றும் மாவட்ட கட்சி நிர்வாகிகள்,ஒன்றிய, நகர, கிளை, வார்டு, சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் சாலை மார்க்கமாக கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு காத்திருந்த கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மாவட்ட கழக செயலாளரை பட்டாசுகள் வெடித்து, ஆரத்தி எடுத்து மேளதாளங்களுடன் மலர்களைத் தூவி பிரம்மாண்டமான முறையில் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக