தர்மபுரி கமலம் இன்டர்நேஷனல் பள்ளியில் ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் மற்றும் இந்தியன் பில்லர்ஸ் இணைந்து தருமபுரியின் அடையாளமாக மாறிவரும் தகடூர் மார்கழித் திருவிழா, கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து இன்று 3வது ஆண்டாக இன்றும் நாளையும் (11.01.2025 மற்றும் 12.01.2025 ஆகிய இரண்டு நாட்கள்) நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு மார்கழி திருவிழாவை தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் நிறுவனர் வினோத் நரசிம்மன் வரவேற்புரை ஆற்றினார், இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் திறனை கலை நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ சர்வதேச அமைப்பின் தருமபுரி பிரிவு தலைவர் பாபு, மற்றும் நிர்வாகிகள், நிகழ்வின் விளம்பரதாரர்கள், மற்றும் திமுகவின் தர்மபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் காவேரி, அவைத்தலைவர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம், துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுகுமார், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வினோத்குமார் மற்றும் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக