தருமபுரி மாவட்டத்தில் மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு ஏழை மக்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பான முறையில் சேவை செய்து வரும் மை தருமபுரி அமைப்பு இந்த புத்தாண்டில் பதிமூன்றாம் ஆண்டு துவக்க விழா கண்டது. துவக்க விழாவை சிறப்பிக்கும் வகையில் ஐம்பது முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், புத்தாடைகள், உணவு, இனிப்புகள் வழங்கி புத்தாண்டு தினம் மற்றும் மை தருமபுரி அமைப்பின் பதிமூன்றாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறந்த விருந்தினராக மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் CKM ரமேஷ், மஹாலக்ஷ்மி சில்க்ஸ் உரிமையாளர் வெங்கடேஷ் பாபு, பி.ஜி.ஆர் மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ், JCI தலைவர் ரவிக்குமார், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அருள்மணி, கிருஷ்ணன், சண்முகம், சிவமணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக