அதனைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, கொங்கு மண்டபத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 623 பயனாளிகளுக்கு ரூ.4.21 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சித்தேரி ஊராட்சி, வாச்சாத்தி முதல் கலசப்பாடி வரையிலான சாலையில் நலுங்கு பாறை ஆற்றின் குறுக்கே ரூ.3.83 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, கொங்கு மண்டபத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 623 பயனாளிகளுக்கு ரூ.4.21 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (27.01.2025) வழங்கினார்கள்.
மேலும், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 560 பயனாளிகளுக்கு ரூ.298.04 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப்பட்டா,இ-பட்டா, மின்னணு குடும்ப அட்டைகளும், வேளாண்மைத் துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.2.85 இலட்சம் மதிப்பீட்டில் உணவு மற்றம் ஊட்டசத்துபாதுகாப்பு இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் கறவை மாடு-1, தேனீ பெட்டி-1, மண்புழு வளர்ப்பு சில்பாலீன் பை-1 பழக்கன்றுகள் மற்றும் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் கீழ் பேட்டரி தெளிப்பான், நுண்ணீர் பாசன கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.22.88 இலட்சம் மதிப்பீட்டில் பால் பண்ணை, சுமை வாகனம், பெட்டிகடை உள்ளிட்ட கடன் உதவிகளும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.4.83 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.83,305/- மதிப்பீட்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் தென்னை பரப்பு விரிவாக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழச்செடிகள் தொகுப்பு மற்றும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்ட நலதிட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 8 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.91.4 இலட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளும் என மொத்தம் 623 பயனாளிகளுக்கு ரூ.4.21 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று வழங்கினார்கள்.
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாள்தோறும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், நலனுக்கும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் பல்வேறு புதிய திட்டப் பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. கிராமங்கள் தோறும் பல்வேறு பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்களும், அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டம், கலசப்பாடியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை அமைப்பது குறித்து அறிவிப்பினை அறிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து கலசப்படையில் சாலை அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இச்சாலை அமைப்பதற்கு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் அமைக்க வேண்டிய போதிய நிதியானது கிராம ஊராட்சியில் இல்லாத காரணத்தால், சிறப்பு நிதியான ஈட்டுத்தொகையாக ரூபாய் இரண்டு கோடி வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு, பின்னர் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஈட்டுத்தொகை ரூபாய் 2 கோடி வழங்கப்பட்டு வனத்துறையின் அனுமதி பெறப்பட்டது.
இதேபோன்று டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் கிராமம் மற்றும் மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில், நான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது ஒன்றிய அரசின் NRHM நிதி திட்டத்தின் கீழ் டாக்டர் கலைஞர் அவர்களால் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த தாய் சேய் நல ஊதி சேவையாக செயல்பட்டு பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் டாக்டர் கலைஞர் அவர்கள் மின்சார இல்லாத கிராமம் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. அதேபோல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளும் நீர் தொட்டிகள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தெருசாலைகள் சிமெண்ட் சாலைகளாக அமைக்கப்பட்டது.
டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் மண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் நலனுக்கான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் திட்டப் பணிகளையும் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தருமபுரி மாவட்டம் கலசப்பாடியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் பாலம் அமைக்கப்பட்டு விரைவில் மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு அவர்கள் பயன்பெறும் வகையில் இச்சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மகளிர் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் மகளிர் பேருந்து பயணம் செய்ய வாய்ப்பு ஆனது இச்சாலை மூலம் அமையும். கலசப்பாடியில் சாலை அமைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தருமபுரி மாவட்ட பொதுமக்கள் தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களில் ஆட்சியில் இன்றைய தினம் தருமபுரி மாவட்டத்தில் 32.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, திரு.மனோகரன், திரு.வேடம்மாள், அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சின்னசாமி, வட்டாட்சியர்கள் திரு.பெருமாள், திருமதி.வள்ளி, பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் திரு. குணசேகரன், கைம்பெண் நல வாரிய உறுப்பினர் திருமதி. ரேணுகா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக