தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பவளந்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோடுப்பட்டி பகுதியில் பட்டா நிலத்தில் மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்த்தபோது அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் 3 பேர் மண்ணை வெட்டி எடுத்து டிப்பர் லாரியில் கடத்தி செல்லும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் கிருஷ்ணன் (31) டிரைவர்கள் கதிர்வேல் (48) கண்ணுபையன் என தெரியவந்தது.இதை யெடுத்து அவர்கள் 3பேரையும் பென்னாகரம் எஸ்ஐ.ஜீவானந்தம் மற்றும் போலீசார் கைது செய்து பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக