தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்தும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து மேலும் அதனை தவிர்ப்பது, தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு செய்திட உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை, கல்வித் துறைக்கு உத்தரவின் பேரில்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர். பானுசுஜாதா, மேற்பார்வையில் , புலிகரை அரசு மேல்நிலைப் பள்ளியில், உதவி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் தலைமையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்கள் பங்கேற்று உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி உணவு பாதுகாப்பு உரிமம் எண், சைவ, அசைவ குறியீடு, அலர்ஜி தன்மை, உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள் தெளிவாக பொருட்களைக் கொண்டு விழிப்புணர்வு செய்தார்.
மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அருகாமையிலோ, தாங்கள் செல்லும் பகுதியில் ஏதேனும் கடைகளில் விற்பனை கண்டால் ஆசிரியர்களிடம் அல்லது 9444042322 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கவும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
புகையிலை பொருட்களின் உபயோகிப்பதால் வாய்ப்புற்று நோய், கேன்சர், கால் விரல்கள் செயலிழத்தல், நினைவு தடுமாற்றம், மற்றும் இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும் எனவே மாணவ சமுதாயம் அதன் பிடியில் சிக்காமல் விழிப்புணர்வுடன் செயல்படவும் தடுத்திட ஒத்துழைப்பு செய்திடவும் ஒருங்கே உறுதிமொழியும் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இறுதியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில் நன்றி உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக