திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளையும் மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியவர்களில் ஒருவக்கு 2025ஆம் ஆண்டிற்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான 15.04.2025-ல் வழங்கப்பட உள்ளது.
இவ்விருதிற்கு ரூ.1,00,000/காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேற்படி விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2025ம் ஆண்டு திருநங்கை முன்மாதிரி விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:
- திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானா சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.
- குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.
- திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது .
- இவ்விருது குறித்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் (https://award.tn.gov.in) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.02.2025 இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, அனைத்து ஆவணங்களையும், தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு கையேடாக (Booklet ) தயார் செய்து தமிழ் அச்சு செய்யப்பட்டுதலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும்.
கருத்துருக்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம், கூடுதல் கட்டடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக