தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த கருக்கனஅள்ளி மலை பகுதியில் மர்ம நபர்கள் சிலர் சாராயம் காய்ச்சுவதாக பாலக்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் நேற்று மாலை கருக்கனஅள்ளி மலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கருக்கனஅள்ளி மலை பகுதியில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர், அவர்களை பிடித்து விசாரித்ததில் பாலக்கோடு பனங்காடு பகுதியை சேர்ந்த பழனி(வயது.47) அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் சுரேஷ் (வயது.32) என்பதும் இருவரும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் 50 லிட்டர் சாராய ஊறலை அழித்ததுடன், 10 லிட்டர் சாராயத்தை குடத்துடன் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய கேஸ் அடுப்பு, குடம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக