தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாலவாடி ஊராட்சியில் அமைந்துள்ள கானாப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசர் முழு உருவ வெண்கல சிலை ரூபாய் 7 லட்சம் மதிப்பில் 7.1/2 அடியில் நிறுவப்பட்டு பால்வாடி ஊராட்சி மன்ற தலைவர் பெ.கணேசன் அவர்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பேத்தி வேதா ஸ்ரீ அவர்கள் காமராசர் சிலையை திறந்து வைத்தனர்.
பின்பு காமராசர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் காமராஜர் சிலைக்கு மலைர்தூவி மரியாதை செலுத்தினார்கள், இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பேச்சு போட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஊர் கவுண்டர் மணி வாசகம், மந்திரி கவுண்டர் சரவணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தீத்தராமன், டாக்டர் சக்திவேல், குமார், மாதையன், பெரியசாமி, சின்னசாமி, ரங்கநாதன், கன்னியப்பன், தனபால், பில்டிங் பெருமாள், சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக