பாப்பாரப்பட்டியில் வீரப்பனின் 73வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 ஜனவரி, 2025

பாப்பாரப்பட்டியில் வீரப்பனின் 73வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி  அ.பாப்பாரப்பட்டி பகுதியில் இன்று (18.01.2025) வீரப்பன் அவர்களின் 73வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாமக மாநில பொதுக்குழு உறுப்பினர் சுதா கிருஷ்ணன், மாதேஅள்ளி பஞ்சாயத்து மு.தலைவர் கோவிந்தசாமி, பிக்கிலி பஞ்சாயத்து மு.தலைவர் விநாயகம், மு.தலைவர் ஆறுமுகம், பாமக நகர செயலாளர் செந்தில் மற்றும் சிறப்பு  அழைப்பாளராக வீரப்பன் தோற்றமுடைய அந்தியூர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.


பின்னர் வீரப்பன் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் வீரப்பனின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களும் ரசிகர் கலந்துகொண்டு சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது பின்னர் வீரப்பன் தோற்றமுடைய அந்தியூர் செங்கோட்டையனுக்கு மாலை அணிவித்து அவரை ஊர்வலமாக அழைத்து சென்று சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad