பருவதனஅள்ளி ஊராட்சியை பென்னாகரம் பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு, வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியுடன் பருவதனஅள்ளி ஊராட்சியை இணைக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பருவதனஅள்ளி ஊராட்சியை சேர்ந்த எட்டிக்குட்டை, ஏறங்காடு, காட்டுக் கொள்ளை, புங்கம்பள்ளம், அண்ணாநகர் கள்ளிபுரம் உள்ளிட்ட கிராமங்கள் பென்னாகரம் பேரூராட்சி உடன் இணைக்கப்படுகிறது.
இதனால் கிராம மக்களுக்கு 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் சூழல் உள்ளது. மேலும் வரிவிதிப்புகள் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பருவத ன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனுவை பெற்றுக் கொண்டு உடனடியாக மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசிலிப்பதாகவும், அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக