தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பாரதிய ஜனதா கட்சியின் வட்டார தலைவராக ஆர் கணேசன் அவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார்.
தற்போது மீண்டும் அவரை பாலக்கோடு வட்டார தலைவராக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிவித்தார். அதனை தொடர்ந்து பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் பி. கே.சிவா, நகர பொருளார் முனியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக