திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கவிதைகள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 ஜனவரி, 2025

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கவிதைகள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பள்ளி மாணவ மாணவர்களுக்கு உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் போர்வெல் ராஜ் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் அன்பழகன், தேவராஜ், கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலை, பிரபு ஒன்றிய அவைத்தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்டத் தலைவர் குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் .மணி, மாநில கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளர் கோபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் உமா சங்கர், ரேணுகாதேவி ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், செல்வராஜ், வைகுந்தன், கருணாநிதி, காவேரி, நகர செயலாளர்கள் சண்முகம், வீரமணி அணிகளின் அமைப்பாளர்கள் பெரியண்ணன் கௌதம், பூவண்ணன், வானவில் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் காளியப்பன், சண்முகம், துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி சின்னசாமி, மகளிர் அணி சமூக வலைத்தள பொறுப்பாளர் மணிமேகலை பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


முடிவில் கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தென்னரசு நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை திமுக இளம் பேச்சாளர் வான்மதி தொகுத்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad