தருமபுரி மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பாக 26.01.2025 அன்று முதல் இயற்கை சந்தை காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை தருமபுரி உழவர் சந்தை வளாகத்தில் நடைப்பெறவுள்ளது. இச்சந்தையில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழவகைகள், கீரைகள், மூலிகை வகைகள், வாழைப்பழம், வாழைப்பூ, பாரம்பரிய அரிசி வகைகள் எண்ணெய் வகைள், நாட்டுக்கோழி, முட்டைகள், நாட்டு சர்க்கரை, வெல்லம், தேன் போன்றவைகள் மகளிர் விவசாயிகள் நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யவுள்ளனர்.
எனவே, தருமபுரி மாவட்டத்தை சார்ந்த பொது மக்களாகிய நுகர்வோர்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வேளாண்மை பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வாங்கி பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக