பென்னாகரம் அருகே அடையாளம் தெரியாமல் வாலிபர் எரித்து கொலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 ஜனவரி, 2025

பென்னாகரம் அருகே அடையாளம் தெரியாமல் வாலிபர் எரித்து கொலை.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி வனப்பகுதி உள்ள சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி வனப்பகுதியை ஒட்டிய பகுதியாகும். பென்னாகரத்தில் இருந்து முதுகம்பட்டி செல்லும் சாலையில் துறிஞ்சிமரத்து பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு தரைப்பாலம் உள்ளது.


காலையில் இருந்து பாலத்தின் கீழிருந்து புகைமூட்டம் இருந்து வந்துள்ளது. அந்த வழியாக சென்ற  இளைஞர்கள் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது ஆண் சடலம் எரிந்த நிலையில் இருந்தது.


இளைஞர்கள் பென்னாகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி மற்றும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றினர்.


பிரேத பரிசோதனைக்காக எரிந்த நிலையில் உள்ள உடலை பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இளைஞர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad