திமுக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 ஜனவரி, 2025

திமுக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சியின் ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது.


நிகழ்வில் சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் அணி பாக முகவர்கள், சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டம் மற்றும் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் தங்கமணி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ எஸ் சண்முகம், நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய செயலாளர் கே பி மல்லமுத்து, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம், மேற்கு ஒன்றிய செயலாளர் காவேரி, நகர செயலாளர் நாட்டான் மாது, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் கே.ஆர்.சி செல்வராஜ், என்.எஸ்.கலைச்செல்வன், ராஜகோபால், கார்த்தி, முத்தமிழ், அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad