தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 40), இவர் டிராக்டர் வைத்து விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் சொந்தமாக இரண்டு ஆடுகள் மற்றும் மூன்று மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் 18ஆம் தேதி இரவு வழக்கம் போல் ஆடு மாடுகளை வீட்டிற்கு முன்பு கட்டிவிட்டு தூங்கச் சென்றுள்ளார். விடியற்காலை 5 மணிக்கு ஏதோ சத்தம் கேட்கவே வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் இரண்டு ஆடுகளையும் முன்னால் வைத்துக்கொண்டு செல்ல முற்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் சத்தம் போடவே இரண்டு ஆடுகளையும் விட்டுவிட்டு வீட்டுக்கு பின்புறம் ஓடி உள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விரட்டி சென்று ஆடு திருடிய மர்ம நபரை பிடித்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்ததில் பாலக்கோடு அடுத்த பனந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் சத்தியமூர்த்தி (வயது 28), என்பதும், ஆடு திருடியது உண்மை என தெரிய வந்தது, இதை அடுத்து வழக்கு பதிவு செய்து சத்யமூர்த்தியை கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக