தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சுரேஷ் (27) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரவு இருசக்கர வாகனம் பழுதானதால் பாப்பாரப்பட்டி ஆசிரியர் காலணியில் உள்ள தனது நண்பர் பிரசாந்த் வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு நண்பரிடம் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் மீண்டும் அடுத்த நாள் வந்து பார்க்கும் பொழுது வண்டி காணாமல் போனது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல் துறையினர் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இன்று வாகன தணிக்கையின் போது போது இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களை சோதனை செய்ததில் வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்துள்ளனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் இவர்கள் இருவரும் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இவர்களிடம் இருந்து ஐந்து இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவர்கள் பாலக்கோடு அருகே உள்ள அண்ணாமலைப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் ஸ்ரீதர் (18) மற்றொருவர் முருகன் மகன் பாரதி (15) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக