ஜக்க சமுத்திரம் கூட்ரோடு ஆஞ்சநேயர் கோயில் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் கனவன் பலி - மனைவி படுகாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

ஜக்க சமுத்திரம் கூட்ரோடு ஆஞ்சநேயர் கோயில் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் கனவன் பலி - மனைவி படுகாயம்.


தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த சூடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48), இவரது மனைவி நந்தினி (வயது.40) இவர்களுக்கு 14 வயதில் மகனும்,  12 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு  தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்ப்ளெண்டர் மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு மாரண்டஅள்ளி அருகே  சாமனூரில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இரவு 9 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.


ஜக்க சமுத்திரம் கூட்ரோடு  ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்து கொண்டிருந்த போது வெள்ளிச்சந்தையில்  இருந்து மாரண்டஅள்ளி  நோக்கி வந்த மோட்டார்சைக்கிள்  சங்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது, இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்‌.


அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்‌, காயம் பட்ட நந்தினியை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகேந்திரமங்கல் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad