நாம் தமிழர் கட்சி சீமானை கைது செய்யக்கோரி மாணவர் அணி சார்பில் காவல் நிலையத்தில் மனு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

நாம் தமிழர் கட்சி சீமானை கைது செய்யக்கோரி மாணவர் அணி சார்பில் காவல் நிலையத்தில் மனு.


சமீபத்தில் கடலூரில் பேசிய நம்ம தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை தவறாக விமர்சித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் தந்தை பெரியார் கூறியதாக தவறுதலான கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என்பவரை கைது செய்ய வேண்டி திராவிட இயக்கங்களின் மாணவர் அணி சார்பில் வழக்குகள் பதிவு செய்ய  மனு வழங்கப்பட்டது.


ஒரே நாளில் மாணவர் அணி சார்பில் ஏழுக்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன. பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் சுர்ஜித் - மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்,  யோகேஷ் - மாணவர் அணி, அய்யனார் - பாப்பிரெட்டிப்பட்டி திராவிடர் கழக ஒன்றிய தலைவர், ஆகிய வர்களும், நடூர் காவல் நிலையத்தில் பா கார்த்திக் - திமுகமாணவரணி, கௌதம் குமார்-திமுக மாணவரணி ஆகியவர்களும், கடத்தூர் காவல் நிலையத்தில், சந்தோஷ் - திமுக மாணவர் அணி, கார்த்திகேயன் - திமுக மாணவர் அணி  ஆகியோர்கள் வழக்குப்பதிவு செய்தனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad