தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வாகன ஓட்டுனர்களுக்கு வாகன பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கலந்துகொண்டு சாலை விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பேசினார். இதில் சாலை விதிமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது மொபைல் போனில் பேசியப்படி வாகனத்தை ஓட்டுவதும் சகஜமாக நடந்து வருகிறது.பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்றபடி செல்லாமல் பாதுகாப்புடன் மாணவர்கள் பயணிப்பது என்பது குறித்து பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் தீயணைப்பு துறை சார்பில் வாகனங்கள் இயக்கும்போது ஏற்படும் தீ விபத்துக்கள் குறித்தும்,அவ்வாறு ஏற்பட்டால் எவ்வாறு உயிர் சேதம், பொருட்சேதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பது குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.அதனைத் தொடர்ந்து சாலை விதிகளை பின்பற்றுவேன் விபத்து இல்லா தமிழகத்தை உருவாக்குவேன் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் பார்த்திபன் , ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பழகுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக