பொங்கல் திருநாளில் பாடி நண்பர்கள் குழு சார்பாக மை தருமபுரி அமைப்புடன் இணைந்து உணவு வழங்கினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

பொங்கல் திருநாளில் பாடி நண்பர்கள் குழு சார்பாக மை தருமபுரி அமைப்புடன் இணைந்து உணவு வழங்கினர்.


மை தருமபுரி அமைப்பின் சார்பாக தினந்தோறும் தருமபுரி அரசு மருத்துவமனை நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு மதியம் மற்றும் மாலை வேளைகளில் உணவு வழங்கி வருகின்றனர். பொங்கல் திருநாளில் தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தின் நண்பர்கள் குழு சார்பாக 700 நபர்களுக்கு உணவு சமைத்து, பசியால் இருந்த மக்களுக்கு வழங்கி பொங்கல் திருநாளில் மகிழ்ந்தனர். பாடி நண்பர்கள் சார்பாக பீனிக்ஸ் கோவிந்தசாமி, சப்தகிரி, வேலு, தமிழ்வாணன், பழனி, விஜய், பூவரசம், யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உணவு வழங்கினர். 


மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனர் சதீஸ் குமார் ராஜா செயலாளர் தமிழ்செல்வன் உணவு ஒருங்கிணைப்பாளர்கள் அருள்மணி கிருஷ்ணன் ஆகியோர் உணவு வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad