தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறும் இத்திருவிற்க்கு உள்ளுர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இலட்சகணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்த வருகின்றனர்.வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் 14 ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நடைபெற இன்னும் மிக குறுகிய நாட்களே உள்ளன.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை எனவும், மொட்டையடிக்கும் பக்தர்களுக்கு குளியல் வசதிகள் செய்து தர வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கோயிலுக்கு செல்லும் குண்டும் குழியுமான சாலைகளை விரைவில் சீரமைத்து தர வேண்டும் எனவும், மேலும் கோயிலை சுற்றி ஆக்கிமித்து வைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் எனவும், கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறாக வணிக நிறுவனங்கள், ரங்காட்டினம், தற்காலிக ஓட்டல் கடைகள் வைக்க அனுமதிக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னனி சார்பில் மாவட்ட செயலாளர் வேடியப்பன் கோயில் ஆய்வாளரிடம் மனு அளித்தனர். அது சமயம் இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் பச்சியப்பன், சரவணன், ஜெகதீஸ்வரன், விஸ்வநாதன், சக்தி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக