சர்வதேச அளவில் பல்வேறு சேவைகளை செய்து வரும் ஜே.சி.ஐ அமைப்பின் தருமபுரி பிரிவு சார்பில் திருப்பூர் குமரன் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதி அறக்கட்டளை, சேலம் ப்ரீதம் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம், நேற்று (11.01.2025) அன்னசாகரம் முருகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், புற்று நோய், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, எலும்பு மற்றும் மூட்டு, நுரையீரல் நோய் மற்றும் இதய நோய் ஆகிய நோய்களுக்கு சிறப்பு பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது, மேலும் இந்த முகாமில் இரத்த அழுத்தம், இ.சி.ஜி மற்றும் இரத்த சர்க்கரை அளவு போன்றவை இலவசமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஜே.சி.இ அமைப்பின் மண்டல தலைவர் விக்னேஷ், மண்டல துணை தலைவர் சிவா பிரசாத், தருமபுரி ஜே,சி.ஐ அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ரவிக்குமார் மற்றும் விஜயகுமார், தருமபுரி ஜே.சி.ஐ அமைப்பின் பத்திரிக்கை பிரிவு பொறியாளர். ஸ்ரீனிவாசன், ஆதி அறக்கட்டளை மற்றும் சேலம் ப்ரீதம் மருத்துவமனை ஊழியர்கள், பயனாளிகள் 150ம் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக