மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் விழிப்புணர்வு பேரணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் விழிப்புணர்வு பேரணி.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தருமபுரி வட்டார வள மையம் சார்பில் மதிப்புமிகு மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் திருமதி ஜோதி சந்திரா அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க 22.1.25 புதன்கிழமை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் தருமபுரி  நகராட்சி தொடக்கப்பள்ளி டவுன் பள்ளியில் நடைபெற உள்ளது.


இம்முகாமில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கலந்து கொள்ள உள்ளனர். இம்மு முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளி  குழந்தைகளை அரசு சிறப்பு மருத்துவர் குழு பரிசோதனை செய்து அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் உரிய மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி, மூளை முடக்குவாத குழந்தைகளுக்கான நாற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. 


மேலும் இம முகாமில் கலந்து கொள்ளும் தகுதியுள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கு  தேசிய அடையாள அட்டை (NID) , தனித்துவ அடையாள அட்டை (UDID), ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகைக்கான பதிவு, அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கான பதிவும் இந்த இலவச முகாமில்  மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே மாற்றுத்திறனுடைய குழந்தைகளின்  பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


முன்னதாக, 21.1.25 செவ்வாய்க்கிழமை  அன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் சார்ந்த விழிப்புணர்வு பேரணியை  நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி டவுன் பள்ளியின் ஆசிரியை அமுதா தொடங்கி வைத்தார்.  தருமபுரி டவுன் நகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கிய இப் பேரணி,  BSNL அலுவலகம் நகராட்சி அலுவலகம், மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நிறைவடைந்தது.


இப்பேரணியில், தருமபுரி வட்டார வளமைய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், ஆசிரியர் பயிற்றுநர் மோகன், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள்,  பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad