அதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், கூட்டுறவுத்துறையின் சார்பில் செம்மாண்ட குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம், சைதாப்பேட்டை, சின்னமலை நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், கூட்டுறவுத்துறையின் சார்பில் செம்மாண்ட குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2025) தொடங்கி வைத்தார்கள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட 2,20,94,585 குடும்ப அட்டைதாரர்களுக்கு, பயனாளி ஒருவருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை அடங்கிய ரூ.249.75 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டு இன்று இதற்கான துவக்க விழா சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 471 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 571 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 44 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1096 நியாயவிலைக் கடைகள் என 4,71,058 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 4,71,058 குடும்பங்களுக்கு ரூ.5,32,48,396/(ரூபாய் ஐந்து கோடியே முப்பத்து இரண்டு இலட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஆறு மட்டும்) பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் இன்று முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி, முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.கு.த.சரவணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி.எஸ்.மலர்விழி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி. இரா.காயத்ரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் திருமதி.தேன்மொழி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செம்மலை, செம்மாண்ட குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் திரு.விநாயகம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக