பல்கலைக் கழக மானிய குழுவின் (UGC) விதிகளை திருத்திய மத்திய அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

பல்கலைக் கழக மானிய குழுவின் (UGC) விதிகளை திருத்திய மத்திய அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் .


பல்கலைக் கழக மானிய குழுவின் (UGC) விதிகளை திருத்தி ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் RSS - BJP கும்பலை விரட்டியடிப்போம்! என்ற தலைப்பில் தருமபுரி BSNL அலுவலகம் அருகில், 10.1.2025 இன்று காலை, 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர், CPM (ML) லிபரேஷன், அவர்கள் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை முத்துக்குமார், மாநில செயலாளர், புரட்சிகர மக்கள் அதிகாரம், பழனி, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, பெரியண்ணன், சித்தானந்தம், தமிழ்தேச மக்கள் முன்னணி, முனுசாமி, சுதந்திர வளர்ச்சிக்கான விவசாயிகள் சங்கம், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


இறுதியாக, புரட்சிகர மக்கள் அதிகாரம், வட்டார துணைச் செயலாளர் மாரியப்பன் நன்றியுரை ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad