தானியங்கி மின் மோட்டார் வாங்க மானியம் பெறலாம்; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 ஜனவரி, 2025

தானியங்கி மின் மோட்டார் வாங்க மானியம் பெறலாம்; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்.


வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக விவசாயிகள் எளிதில் பணி மேற்கொள்ள வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் அலைபேசி வழியாக செயல்படுத்தும் (Mobile Phone operated Automatic Pumpset controller / Remote Motor operator for electric pumpset) மின் மோட்டார்களை மானியத்தில் வழங்குதல் விவசாயத்தில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும் விவசாயிகள் காலத்தே சாகுப்படிப் பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தித் திறனை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு, வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருகிறது.


நடப்பு (2024-25 ஆம்) நிதி ஆண்டில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில், தருமபுரி மாவட்டத்திற்கு, அலைபேசி வழியாக செயல்படுத்தும் (Mobile Phone operated Automatic Pumpset controller / Remote Motor operator for electric pumpset) ரூ.13.09/- இலட்சம் மதிப்பிலான 187 மின் மோட்டார்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. 


எனவே மேற்படி மோட்டார்கள் தேவைப்படும் விவசாயிகளில் சிறு, குறு ஆதிதிராவிடர்/ பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.7000/- மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.4000/- வழங்கப்படுகிறது.


எனவே மேற்படி மோட்டார்கள் வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் 

  1. உதவி செயற்பொறியாளர்(வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி (தொலைப்பேசி: 04342 296132) மற்றும் 
  2. உதவி செயற்பொறியாளா(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு, அரூர், தருமபுரி (தொலைப்பேசி: 04346296077) 


அலுவலகங்களை தொடர்பு கொண்டு உரிய வழிமுறைகளின்படி மானியத்தில் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது, என  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad