தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப்ரமணியன், சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.பிரேமகுமாரி ஆகியோர் முன்னிலை . வகித்தனர். இப்பேரணியை மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப்ரமணியன், மருத்துவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியானது அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கி தக்காளிமண்டி, பைபாஸ்சாலை, வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பேருந்து நிலையம், கடைவீதி, மைதானம் வழியாக சென்றது.
இப்பேரணியில் விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில், தலைக்கவசம் உயிர் கவசம், வளைவில் முந்தாதே, மஞ்சள் கோட்டை தாண்டாதே, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதே, விரைவாக வாகனம் ஓட்டாதீர், என பதாகை ஏந்தி 200க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவிகள் பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம். சப்-இன்ஸ்பெக்டர் கோகுல், மோட்டார் வாகன கண்காணிப்பாளர் பார்த்தீபன், மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக