தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து ஈ. அக்ரஹாரம் கிராமத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞன் நற்பணி மன்றம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகின்றனர்
- வயதான முதியவர்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது
- அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது
- கிராமப்புற பகுதி சாலையோரங்களில், மற்றும் அரசு அலுவலகங்கள் மரக்கன்றுகள் நட்டு அதை பராமரிப்பது
- இதுவரை 2212 மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது இதைத் தவிர எண்ணற்ற சேவைகள் செய்து வருகின்றனர்
இச்சேவையை பாராட்டும் விதமாக சென்னையில் நடைபெற்ற SOUTH ICONIC AWARDS-2024 விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவைக்கான விருது சென்னை மாநகர காவல் கண்காணிப்பாளர் L. டில்லி பாபு, திரைப்பட இயக்குனர் பேரரசு (திருப்பாச்சி,சிவகாசி தர்மபுரி, போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்) இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது, விருதினை சுரேஷ் (JCB ஆப்ரேட்டர் ) மற்றும் நா.சின்னமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பெற்றுக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக