கடகத்தூர்‌ ஊராட்சியில்‌ இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஆப. அவர்கள்‌ கலந்துகொண்டார்‌. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

கடகத்தூர்‌ ஊராட்சியில்‌ இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஆப. அவர்கள்‌ கலந்துகொண்டார்‌.


76-வது குடியரசு தின விழாவையொட்டி, தருமபுரி ஊராட்சி ஒன்றியம்‌, கடகத்தூர்‌ ஊராட்சியில்‌ இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஆப. அவர்கள்‌ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்‌.


76-வது குடியரசு தின விழாவையொட்டி, தருமபுரி ஊராட்சி ஒன்றியம்‌, கடகத்தூர்‌ ஊராட்சியில்‌ இன்று (26.01.2025) நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஆப. அவர்கள்‌ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்‌. இக்கிராம சபை கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஆப. அவர்கள்‌ தெரிவித்ததாவது: 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள 251 ஊராட்சிகளிலும்‌ கிராம சபைக்கூட்டம்‌ இன்று (26.01.2025) நடைபெற்றது. இக்கிராம சபைக்கூட்டத்தில்‌, கடகத்தூர்‌ ஊராட்சியின்‌ கிராம ஊராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ பொது நிதி பொதுசெலவினங்கள்‌ குறித்தும்‌, கிராம ஊராட்சியின்‌ தணிக்கை அறிக்கை, கொசுக்கள்‌ மூலம்‌ பரவும்‌ டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்தும்‌, மக்கள்‌ திட்டமிடல்‌ இயக்கம்‌ (People's Plan Campaign) மூலம்‌ 2025-26 குறித்து விவாதித்தல்‌ உள்ளிட்ட பல்வேறு இதர பொருள்கள்‌.    குறித்து    விவாதிக்கப்பட்டு,    பல்வேறு    தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டன.


குடியரசு தினவிழா-2025 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்‌ கிராம சபைக்கூட்டம்‌ இன்று நடைபெறுகின்றது. இந்த கடகத்தூர்‌ ஊராட்சியில்‌ நடைபெறுகின்ற இக்கிராம சபைக்கூட்டத்தில்‌ கலந்து கொள்வதில்‌ பெருமகிழ்ச்சி அடைகின்றேன்‌. தருமபுரி மாவட்டத்தின்‌ வளர்ச்சிக்கும்‌, தருமபுரி மாவட்ட மக்களின்‌ அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும்‌ அரசு எண்ணற்ற மக்கள்‌ நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி   வருகின்றது.   


அத்தகைய   திட்டங்களை   கடைக்கோடி கிராமங்களுக்கும்‌ கொண்டு சேர்க்கும்‌ பணியினை மாவட்ட நிர்வாகம்‌ முனைப்போடு செயல்படுத்தி வருகின்றது. கிராமங்களின்‌ வளர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும்‌. அந்த வகையில்‌ கிராமங்களின்‌ வளர்ச்சிக்கு அரசு செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை பொதுமக்களும்‌ முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்‌. பொதுமக்கள்‌ தங்கள்‌ கிராமங்களை சுத்தமாகவும்‌, சுகாதாரமாகவும்‌ பராமரித்து தூய்மையாக வைத்து கொண்டால்‌ சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறும்‌ வாய்ப்பினை அனைத்து ஊராட்சிகளும்‌ பெறலாம்‌. இந்த ஊராட்சியும்‌ சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும்‌ நீங்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.


தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும்‌ குடிநீர்‌ படிப்படியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீர்‌ சேமிப்பு இன்றைய காலக்கட்டத்தில்‌ மிக முக்கியமான ஒன்றாகும்‌. பொதுமக்கள்‌ குடிநீரை வீணாக்காமல்‌ பயன்படுத்த வேண்டும்‌. பொதுமக்கள்‌ அனைவரும்‌ அயோடின்‌ கலந்த உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்‌. இந்த கிராம சபைக்கூட்டத்தில்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்து பொதுமக்கள்‌ நேரிடையாகவும்‌, மனுக்களின்‌ வாயிலாகவும்‌ தெரிவித்துள்ளீர்கள்‌.


அதுகுறித்து உரிய ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டு, அரசின்‌ விதிமுறைகளுக்கு
உட்பட்டு நிறைவேற்றக்கூடிய அனைத்து திட்டங்களும்‌ படிப்பாயாக நிறைவேற்றப்படும்‌. மேலும்‌. தகுதியான நபர்களுக்கு, அரசின்‌ விதிமுறைகளுக்கு உட்பட்டு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கப்படும்‌. கிராமத்தில்‌ உள்ள அனைத்து குழந்தைகளும்‌ பள்ளி இடை நிற்றலை தவிர்த்து அனைவரும்‌ பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள்‌ உறுதி செய்திட வேண்டும்‌. மேலும்‌, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்‌ கீழ்‌ பணியாற்றும்‌ பணியாளர்களுக்கு ஊதியம்‌ சரியான நேரத்தில்‌ வழங்கப்பட வேண்டும்‌.


மேலும்‌, கிராமங்களின்‌ வளர்ச்சிக்கு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கிராமங்களை பொதுமக்கள்‌ தூய்மையாக வைத்துக்கொள்வதோடு, பசுமை நிறைந்த கிராமமாக உருவாக்கிட அனைவரும்‌ மரக்கன்றுகளை நட்டு பராமரித்து பாதுகாக்க வேண்டும்‌. நெகிழி பயன்பாட்டை முற்றிலும்‌ தவிர்த்து, தருமபுரி மாவட்டத்தை நெகிழா இல்லா மாவட்டமாக உருவாக்குவதற்கு அனைவரும்‌ முழுஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்‌ தெரிவித்தார்‌.


முன்னதாக, இக்கிராம சபைக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஆப. அவர்கள்‌ வாக்காளர்‌ மற்றும்‌ தேசிய தொழுநோய்‌ உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு, கலைஞர்‌ விளையாட்டு உபகரணங்கள்‌
அடங்கிய தொகுப்புகள்‌ மற்றும்‌ தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார்கள்‌. 


இதனைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்டம்‌, நல்லம்பள்ளி வட்டம்‌, அதியமான்‌ கோட்டை ஊராட்சியில்‌ உள்ள அருள்மிகு காலபைரவர்‌ மற்றும்‌ சென்றாயசுவாமி சோமேஸ்வரர்‌ வகையறா திருக்கோயிலில்‌ இன்று (26.01.2025) நடைபெற்ற சமபந்தி விருந்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்‌ கலந்துகொண்டு, பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார்கள்‌. 


இந்நிகழ்ச்சியில்‌      தருமபுரி      சட்டமன்ற      உறுப்பினர்‌ திரு.எஸ்‌.பி.வெங்கடேஷ்வரன்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி. ஆர்‌.கவிதா, வருவாய்‌ கோட்டாட்சியர்‌ திருமதி.காயத்ரி, மாவட்ட ஆதிதிராவிடர்‌ நலத்துறை அலுவலர்‌ திரு.சாகுல்‌ ஹமீத்‌,     வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ திருமதி.கலைவாணி, திருமதி.சத்யா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad