பாலக்கோடு அருகே சொத்து தகராறில் தந்தையின் 2-வது மனைவியை இரும்பு ராடால் அடித்து கொன்ற முதல் மனைவியின் மகன்-தந்தை படுகாயம்-போலீசார் விசாரணை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

பாலக்கோடு அருகே சொத்து தகராறில் தந்தையின் 2-வது மனைவியை இரும்பு ராடால் அடித்து கொன்ற முதல் மனைவியின் மகன்-தந்தை படுகாயம்-போலீசார் விசாரணை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (65) இவர் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது முதல் மனைவி மாரியம்மாள் இவர்களுக்கு ஜெயராஜ் (38) என்ற மகன் உள்ளார். மாரியம்மாள் பல ஆண்டுகளுக்கு முன்னரே ரங்கசாமியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். ரங்கசாமி ஜோதி (40) என்பவரை இரண்டவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.


ரங்கசாமி தனது சொத்தில் ஒரு பகுதியை முதல் மனைவிக்கு கொடுத்துள்ளார். ஆனால் இதனை ஏற்காத முதல் மனைவி மாரியம்மாள் மேலும் சொத்து கேட்டுரங்கசாமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று முதல் மனைவி மாரியம்மாள், அவரது மகன் ஜெயராஜ், இவரின் கூட்டாளி சந்தோஷ் (36), ஆகியோர் ரங்கசாமியின் வீட்டிற்க்கு சென்று நீ கொடுத்த சொத்து போதுமானதாக இல்லாததால் குடியிருக்கும் வீட்டை எழுதி கொடுக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர்.


இதற்கு ரங்கசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ், சந்தோஷ் ஆகியோர் தங்கள், மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் ரங்கசாமியை தாக்கி உள்ளனர். இதனை தடுக்க வந்த ரங்கசாமியின் இரண்டாவது மனைவி ஜோதியை அதே இரும்பு ராடால் அடித்தே கொன்றுள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.


இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று ரங்கசாமியை மீட்டு பாலக்கோடு  அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ரங்கசாமியின் முதல் மனைவி, மகன் உட்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad