தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 15.01.2025 திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2025 குடியரசு தினம் அன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A 7 FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள்/முன்னாள் படை வீரர் மதுவிற்பனைக் கூடம் அனைத்தும் 14.01.2025 இரவு 10.00 மணி முதல் 16.01.2025 காலை 12.00 மணி வரையும் மற்றும் 25.01.2025 இரவு 10.00 மணி முதல் 27.01.2025 காலை 12.00 மணி வரையும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது.
மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக