தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுதலின்றி பொங்கல் பரிசினை வழங்கும் வகையில் தெருவாரியாக உள்ள தகுதியுள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 03.01.2025 இன்று முதல் 09.01.2025 முன்பாக டோக்கன்கள் விநியோகம் செய்யவும், பொங்கல் பரிசு தொகுப்பு 09.01.2025 முதல் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக 13.01.2025 வரையில் சுழற்சி முறையில் (Staggering System) விநியோகம் மேற்கொள்ள டோக்கன் வழங்குவதற்கு நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு டோக்கன்கள் வீடுதோறும் சென்று நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணி தொடர்பாக 03.01.2025 இன்று மற்றும் 10.01.2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களில் அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு குறித்து குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட கீழ்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள்
1. 1967
2. 1800 425 5901
3. 044 28592828
4. 1077
5. 04342 233299
வட்ட அளவில் ஏதேனும் புகார்கள் தெரிவிக்க வட்ட வழங்கல் அலுவலர்களின் கைப்பேசி எண்களையும் உபயோகப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
- தருமபுரி - 9445000217,
- பென்னாகரம் - 9445000218,
- பாலக்கோடு - 9445000219,
- அரூர் - 9445000220,
- பாப்பிரெட்டிப்பட்டி - 9445000221,
- காரிமங்கலம் - 9445796431,
- நல்லம்பள்ளி - 9445796432.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக