தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வனத்துறையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் பிக்கனஅள்ளி, ஜிட்டாண்ட அள்ளி, மகேந்திரமங்கலம், அண்ணாமலை அள்ளி, ஜக்கசமுத்திரம், உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 5,000 ஏக்கருக்கு மேல் கரடு முரடாக இருந்த பகுதியை சமன் செய்து. 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5 தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மின் இணைப்பு, குடிநீர், ரேஷன் கடை, பள்ளிக்கூடம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட குடிமக்களுக்கு செய்து தர வேண்டிய அத்தனை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. நூறாண்டு காலம் ஐந்து தலைமுறையாக விவசாயிகளின் குடும்பங்களின் உழைப்பு இந்த நிலத்தில் செலுத்தப்பட்டு கரடு முரடு, மேடாக இருந்ததை பயன்படுத்தி விளைநிலங்களாக மாற்றி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1988 முதல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் நிலங்களை வருவாய்த்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்து விட்டதாக கூறி விவசாயிகளை வனத்துறையினர் வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். விவசாயிகள் வைத்த மா மரங்களுக்கு வரி கட்ட வேண்டும் என நிர்பந்தம் செய்கின்றனர். கடந்த 2006 ஆம் வருடம் நிறைவேற்றப்பட்ட பாரம்பரியமாக வனத்தை சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமை சட்டம் 2006 பிற சமுதாய மக்களுக்கும் வழங்கி உள்ள உரிமைகளின் படி அவர்களுக்கு நில பட்டா வழங்க வழிவகை செய்திட வேண்டும். வனத்துறையினர் தினம் தோறும் விவசாயிகளை அச்சுறுத்துகிற வகையில் பயிர்களை நாசம் செய்து அடித்து துன்புறுத்துகிற தன்மையில் செயல்படுவது. விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது விவசாயிகளின் உளவுப் கருவிகளை பறிமுதல் செய்வது போன்ற அத்துமீறல்களை வனத்துறையினர் ஈடுபடுவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டில்லி பாபு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி – டில்லி பாபு - மாநில மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக