பாலக்கோடு அருகே உள்ள பேகாரஅள்ளியை சேர்ந்தவர் மாதன். விவசாயி. இவரது மனைவி அலமேலு (வயது45). இவர் தனது வீட்டின் முன்பு சாலையோரம் உள்ள இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (58), அவரது மனைவி முத்துமாரி (50), இவர்களது மகன் பெரியண்ணன் (30) ஆகியோர் அலமேலுவிடம் அரசுக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமிப்பதாக கூறி தகராறு செய்து கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அலமேலு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரி யசாமி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக