பென்னாகரம் கடை வீதியில் பத்திரிக்கையாளருக்கு கிடைத்த 50,000 ரூபாய் DSP யிடம் ஒப்படைப்பு; தவறவிட்ட நபரிடம் பணத்தை ஒப்படைத்த போலீசார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 பிப்ரவரி, 2025

பென்னாகரம் கடை வீதியில் பத்திரிக்கையாளருக்கு கிடைத்த 50,000 ரூபாய் DSP யிடம் ஒப்படைப்பு; தவறவிட்ட நபரிடம் பணத்தை ஒப்படைத்த போலீசார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பத்திரிக்கை துறையில் மாவட்ட நிருபராக பணியாற்றி வரும் தர்மராஜா என்பவர், இன்று பென்னாகரம் கடைவீதியில், சாலை ஓரத்தில் 50 ஆயிரம் ரூபாய் பணம் கண்டெடுத்து உள்ளார். 


உடனடியாக இது குறித்து பென்னாகரம் பத்திரிகையாளர்கள் மன்றத்திற்கு தகவல் கொடுத்துள்ளார், அதனைத் தொடர்ந்து பென்னாகரம் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் ஜீவானந்தம் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் குபேந்தின், செயற்குழு உறுப்பினர் சேட்டு ஆகியோருடன் சென்று 50 ஆயிரம் ரூபாய் பணத்தை, பென்னாகரம் டிஎஸ்பி மகாலட்சுமி அவர்களிடம் ஒப்படைத்தனர். 


அதனைத் தொடர்ந்து, போலீசார், கடைவீதியில் விசாரணை மேற்கொண்டதில், பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை பகுதியை சேர்ந்த அருண்குமார் வயது 27, என்பவர், வங்கியில் நகை அடமானம் வைத்து, பணத்தைப் பெற்றுச் செல்லும் போது, தவறவிட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் பென்னாகரம் டிஎஸ்பி மகாலட்சுமி அவர்கள் பணத்தை ஒப்படைத்தார். 


மேலும் கடைவீதியில் கிடைத்த பணத்தை, காவல்துறையிடம் ஒப்படைத்த பத்திரிக்கையாளர் தர்மராஜா வை டிஎஸ்பி மகாலட்சுமி அவர்கள் பாராட்டினார் மற்றும் பென்னாகரம் பத்திரிகையாளர்கள் மன்றத்தினர் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad