பாலக்கோடு, புதுார் மாரியம்மன் கோவில் உண்டியலில், 5.16 லட்சம் ரூபாயை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக் கோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபுதுார் மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும், மாசி மாத பவுர்ணமி அன்று நடப்பது வழக்கம். இந்தாண்டு ஜன., 31ல் கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், பிப்., 10 முதல், பிப்., 14 வரை நடந்தது. இதில், பாலக்கோடு, பனங்காடு, மேல்தெரு, புதூர், கல் கூடப்பட்டி, குப்பன் கொட்டாய், வாழைத்தோட்டம், செங்கோடப்பட்டி, மணியகாரன் கொட்டாய், ரெட்டியூர், சித்திரப்பட்டி, காவாப் பட்டி ஆகிய, 12 கிராம மக்கள் ஒன் றிணைந்து கொண்டாடினர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் கடந்த டிச., 30 அன்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து, திருவிழா முடிந்ததை அடுத்து, நேற்று கோவில் வளாகத்தில் உண்டி யலில் பக்தர்கள் அளித்த காணிக்கை கோவில் செயல் அலுவலர் செந்துார் முருகன் தலைமையில் எண்ணப்பட்டன. இதில், 5.16 லட்சம் ரூபாய், 20 கிராம் தங்கம், 95 கிராம் வெள்ளி-ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கை யாக செலுத்தியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக