தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்ட விராதமாக பனங்கள் விற்பனை செய்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி. மனோகரன் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாக்கன்கொட்டாய், கோடியூர், சிக்கார்தனஅள்ளி, கடமடை, கரகத அள்ளி, கூசிக் கொட்டாய் ஆகிய பகுதிகளில் பனங்கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்த சக்திவேல் (வயது. 55), சின்னசாமி(வயது.48), ராமஜெயம்(வயது.47), ராஜா(வயது. 38), மாது(வயது. 60), வெங்கடேசன்(வயது. 55) ஆகிய 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து தலா 10 லிட்டர் பனங்கள்ளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக